6 மனைவிகள் மூலம் 54 குழந்தைகளுக்கு தந்தையான நபர் மரணம்…. நிராசையான 100 குழந்தைகளின் கனவு!!

680

பலோசிஸ்தான்..

பலோசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் அப்துல் மஜீத் மெங்கல் (75). இவர் கடந்த 2017ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய சமயத்தில் உலகளவில் வைரலானார்.

இதற்கு காரணம் மஜீத்துக்கு ஆறு மனைவிகள் மூலம் 54 குழந்தைகள் பிறந்தது தான். அப்போது அளித்திருந்த பேட்டியில் தான் 100 குழந்தைகளுக்கு தந்தையாக ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.

மஜீத்தின் இரண்டு மனைவிகள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தற்போது நான்கு மனைவிகள் உயிருடன் உள்ளனர்.


அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலேயே மஜீத் உயிர் பிரிந்தது, அவரின் 12 குழந்தைகள் ஏற்கனவே பட்டினியால் உயிரிழந்துவிட்டனர். இது தொடர்பில் மஜீத் முன்னர் அளித்திருந்த பேட்டியில், நான் டிரக் ஓட்டுனராக இருக்கிறேன்.

ஒரு சமயத்தில் என் மூத்த பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க கடுமையாக உழைத்தேன், ஆனால் தற்போது வயதாகிவிட்டதால் எல்லாம் என் கையை மீறி போய்விட்டது என கூறியது குறிப்பிடத்தக்கது.