6 மாத குழந்தையைக் கொன்ற தாய் மற்றொரு மகனைப் பார்க்க ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!!

436

தன்னுடைய 6 மாத குழந்தையை கால்வாயில் அழுத்திக் கொடூரமாக கொலைச் செய்த தாய்க்கு, தனது மற்றொரு குழந்தையைக் காண்பதற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் 2008ல் சுஷில் மற்றும் ரிது தம்பதிக்கு திருமணமானது. இவர்களுக்கு 2010 ல் ஒரு மகனும் இதைத் தொடர்ந்து 2014 ல் ஆரூஹி என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

குழந்தை ஆருஹி கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ஒரு வீட்டில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் கடத்தல் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதைத் திறந்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ரிது தன்னுடைய மகளை மடியில் வைத்த படி செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.

தன்னுடைய குழந்தையை மன அழுத்தத்தின் காரணமாக வளர்க்க முடியாமல் ஒரு வடிகாலில் வீசிவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையின் சடலத்தை அங்கிருந்து மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரிது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2016 ம் ஆண்டு ரிதுவுக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கிநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


2019 ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்று ஜூலை 3ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ரிதுக்கு அவருடைய மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.