7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவர்.. தேடி சென்று பார்த்த மனைவிக்கு காத்திருந்த ஷாக்!!

365

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஐசூர் போலீஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராவ். அவர் 2015 இல் திருமணம் செய்து கொண்டார். லக்ஷ்மண் ராவுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் லட்சுமண ராவ் திடீரென மாயமானார். இதுகுறித்து ஐசூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் லக்ஷ்மண் ராவ் போன்று ஒரு திருநங்கையும் இருந்தார். லட்சுமண ராவின் குடும்பத்தினரும் இந்த வீடியோவை பார்த்து ஐசூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார், ரீல்சில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் இருந்த லட்சுமண ராவ் மற்றும் திருநங்கை குறித்து விசாரித்து தகவல் பெற்றனர்.

அப்போது அந்த ரீலை பதிவு செய்த ராஷ்மிகா, லட்சுமண ராவ் தோற்றத்துடன் இருக்கும் திருநங்கையின் முகவரியை போலீசாரிடம் கொடுத்தார். அந்த முகவரிக்கு போலீசார் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த திருநங்கையின் பெயர் விஜயலட்சுமி என்றும், 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன லட்சுமணராவ் திருநங்கை என்றும் கண்டுபிடித்தனர். பின்னர், விஜயலட்சுமி (லட்சுமணராவ்) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


விஜயலட்சுமியின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அதன்பின், திருநங்கை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் அவரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழச் சொன்னார்கள்,

ஆனால் அவர் காவல்துறையினரோ அல்லது அவரது குடும்பத்தினரோ சொல்வதை கேட்க மறுத்துவிட்டார். பெண்ணுக்குரிய குணங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்கு மனைவி, குழந்தைகள் வேண்டாம். அவர்களுடன் வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை.

திருநங்கையாக வாழ விரும்புவதாக திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், குடும்பத்தினரும் மிகுந்த வேதனையும், ஏமாற்றமும் அடைந்தனர்.

காணாமல் போனவர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டார், ஆனால் அவர் திருநங்கையாக மாறியதால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் வெளியேறினர்.