72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது எஸ்பிபி உடல்..!

500

எஸ்.பி.பாலசுப்ரமணியம்..

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்தும், சிகிச்சை பலன் அளிக்காததால் நேற்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெரும்திரளானோர் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுச்செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடலானது அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


நல்லடக்கத்தின் போது 24 பொலிஸார் மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டு 72 குண்டுகள் முழங்க அவரின் பூதவுடலுக்கு மரியாதை செய்தனர்.