7ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்… எல்லை மீறிய அத்தை மகன்.. பகீர் சம்பவம்!!

499

சேலம்….

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த போது, சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அச்சிறுமியிடம் விசாரித்தனர்.

மேலும் சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.


அதன்பேரில் போலீசார், சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். அதில் சிறுமியின் அத்தை மகனான கட்டிட தொழிலாளி கோபிநாத் (19) என்பவர்தான் இந்த கர்ப்பத்திற்கு காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

சொந்த அத்தை மகன் என்பதால் சிறுமி கள்ளம் கபடமின்றி பழகியுள்ளாள். அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட கோபிநாத் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. அதுவும் 12 வயதில் 7 மாத கர்ப்பம் என்பது, அதுவும் தாய்க்கு தெரியாமல் இருந்தது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோபிநாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.