9 வயது சிறுவனுக்கு ஒரே வாரத்தில் ரூ.1.7 கோடி லாபம் : எப்படி சாத்தியம்?

146

சந்திரபாபு நாயுடுவின் வெற்றியை தொடர்ந்து அவரது பங்குகள் உச்சத்தை தொட்டதால் அவரது குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக மாறியுள்ளது. இதனால், நான்காவது முறையாக ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார்.

இதனால், சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் நடத்தும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உச்சத்தை தொட்டது.

அதாவது பங்குகளின் விலை இரண்டு வாரங்களில் இரண்டு மடங்கு அதிகரித்ததால் அந்த நிறுவனத்தில் 35.7 சதவீதபங்குகளை வைத்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

இந்த நிறுவனத்தில், சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு 34.37 % பங்குகளும், மகன் லோகேஷுக்கு 10.82 % பங்குகளும், மருமகள் பிராமணிக்கு 0.46 % பங்குகளும், அவரது 9 வயது பேரன் தேவன்ஷுக்கு 0.06 % பங்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் பேரன் தேவன்ஷ் வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3 -ம் திகதி ரூ.2.4 கோடியாக இருந்த நிலையில் ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது.


அதன்படி, ஒரே வாரத்தில் தேவன்ஷுக்கு ரூ.1.7 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 52 வார அதிகபட்சமாக ரூ.727.9-ஐ எட்டியதால் ரூ.1,225 கோடி லாபத்தை பெற்றுள்ளது.