கேரளாவில்..

கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ. இவர் அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமாகிவிட்டது.

மனைவி குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்தார். ஆனால் இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததால், மனைவி இவரை விட்டு பிரிந்துசென்றார்.

அதன்பிறகு ஆண்டோ, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். ஆனால் அந்த பெண்ணும், ஆண்டோவை பிடிக்காமல், அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால், ஆண்டோ, இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்து வந்தார். அந்த பெண்ணின் பெயர் நீது.. அவருடன் குடும்பம் நடத்தலாம் என்று முடிவுசெய்த ஆண்டோ, நீதுவை அழைத்து கொண்டு, ஊரை விட்டு வெளியேறினார்.

காசர்கோடு பகுதிக்கு சென்று அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நீதுவுடன் வாழ ஆரம்பித்தார். அங்குள்ள ரப்பர் எஸ்டேட்டிலும் வேலை பார்த்து வந்தார். ஆனால், ஆண்டோவை நீதுவுக்கும் பிடிக்கவில்லை.

இவர்களுக்குள் தகராறுகளும், சண்டைகளும் வந்துபோயின. தினம் தினம் வீட்டிற்குள் பிரச்சனைகள் அதிகமாகி கொண்டே வந்தது. இப்படித்தான் சம்பவ தினத்தன்றும், விவகாரம் முற்றி உள்ளது.

இந்த சண்டையில் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த ஆண்டோ, நீதுவை சரமாரியாக தாக்கினார். ஒருகட்டத்தில் ஆவேசம் அதிகமாகி, நீதுவின் கழுத்தை நெரித்துவிட்டார். இதில் நீது, துடிதுடித்து உயிரிழந்துவிட்டார்.

கடந்த மாதம் 27-ந்தேதி இந்த கொலையை செய்தார் ஆண்டோ. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துவிட்டதால் நீது கண்ணெதிரே சரிந்து விழுந்து உயிரிழந்ததை பார்த்து ஆண்டோ பயந்துவிட்டடார்.

ஆனால் அவர் நீதுவை கொலை செய்ததை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. பிணத்தை எங்கே கொண்டு போய் போடுவது என்றும் தெரியவில்லை. அதனால், அந்த பிணத்துடனேயே அதே வீட்டில் 3 நாட்கள் ஒன்றாகவே தங்கி இருந்தார்.

3 நாட்களுக்கு பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. அவரால் பிணத்துடன் அந்த ரூமுக்குள் இருக்கவே முடியவில்லை. எனவே, அங்கிருந்து தலைமறைவானார்.

இதற்கு பிறகு, துர்நாற்றம் அதிகமாகவும், அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு, வீட்டுக்குள் நுழைந்து பார்த்தனர். அப்போதுதான், நீது இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தந்தனர்.

போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். அதற்கு பிறகு, ஆண்டோவை தேடி ஆரம்பித்தனர். எப்படியும் தப்பிச்செல்ல ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளுக்குதான் அவர் வருவார் என்பதால், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

எதிர்பார்த்தபடியே மும்பைக்கு தப்பி செல்ல திருவனந்தபுரம் ரெயில்வே ஸ்டேஷன் வந்தார் ஆண்டோ. அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், கள்ளக்காதலியை கொலை செய்து பிணத்துடன் 3 நாள் ஆண்டோ தங்கி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















