வைரலாகும் திருமண போஸ்டர்.. இளைஞன் கைது : பரபரப்பு சம்பவம்!!

550

விழுப்புரத்தில்..

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது பழமொழி. அதற்கேற்ப பல முறை போய் பார்த்து விசாரித்து படாத பட்டு திருமணத்தை நடத்திய காலமெல்லாம் மலையேறி போச்சு . இன்றைய தலைமுறை திருமணத்தை ஒரு கொண்டாட்டமாகவே பார்த்து வருகிறது.

முடிந்த வரை என்ஜாய் பண்ணு. சந்தோஷமா இரு. நினைச்சத செய் என்பது தான் இளைய தலைமுறையின் ஒருமித்த கருத்து. அதிலும் திருமணத்தில் மணப்பெண் ஆடிக்கொண்டே மேடைக்கு வருவது.

மணமகன் பறந்து வருவது என வித்தியாசம் காட்டியும் வருகின்றனர். திருமணத்திற்கு வருபவர்கள கவர்ந்திழுக்க பல வகையான அமர்க்களங்கள் அரங்கேறி வருகின்றன.


அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அருண், கனகலட்சுமி திருமணம் நடைபெற்றது. இதனை கொண்டாடவும் , மணமக்களை வாழ்த்தவும் மணமகன் அருணின் நண்பர்கள் வித்தியாசமாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது குறித்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில் ,
செஞ்சி அருகே பரபரப்பு வாலிபர் கைது..!
குற்றம்: பெண்ணின் மனதை திருடிவிட்டார்.
தீர்ப்பு: மூன்று முடிச்சு போடுதல்.
கைது செய்யும் நாள் 10.2.2023 வெள்ளிக்கிழமை.
கைது செய்யும் இடம்: மயிலம் முருகன் திருக்கோயில்.
தண்டனை வழங்கப்படும் இடம் மனோரஞ்சிதம் திருமண மண்டபம் செஞ்சி.
கைதானவர் எம்.அருண்.
கைது செய்தவர் எஸ்.கனகலட்சுமி.
…சாட்சிகள்…

என அச்சிடப்பட்டிருக்கிறது. சுப நிகழ்வு என்பது மாறி திருட்டு , கைது, தீர்ப்பு என கலாச்சார பிறழ்வை நிகழ்த்தி கொண்டிருக்கின்றனர் என நெட்டிசன்கள் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.