பேஸ்புக்கில் தற்கொலை வீடியோவை வெளியிட்ட இளைஞர்.. அதிரடியாக பேஸ்புக் நிறுவனம் எடுத்த முடிவு!

506

பேஸ்புக் நிறுவனம்………

இளைஞர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்வதாக வீடியோவை வெளியிட்டு பேஸ்புக் நிறுவனம் காப்பாற்றிய சம்பவம் மேற்குவங்காளத்தில் நிகழ்ந்துள்ளது.

மேற்குவங்காள மாநிலம், பிம்பூரில் வசித்துவரும் இளைஞர் கடந்த 3 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவரை நான்கு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு தொடர் மன அழுத்தத்தில் இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவை பார்த்த பேஸ்புக் நிறுவனம் உடனடியாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு இளைஞரின் வீட்டை கண்டுப்பிடித்து தற்கொலை முயற்சியிலிருந்து இளைஞரை மீட்டுள்ளனர். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.