சென்னை….

சென்னை அண்ணா நகர் பிரிவெரி காலனி பகுதியில் அமைந்தகரை காவல் ஆய்வாளர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்த போது, பொதுமக்கள் ஒன்றுக்கூடி திருடன், திருடன் என கத்தியவாரு விரட்டியுள்ளனர்.

அதனை கண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றதும், அந்த நேரத்தில் அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மொட்டை மாடியில் பதுங்கி இருந்த அவனை அமைந்தகரை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் முகப்பேரை சேர்ந்த சுப்பிரமணி(26), என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மதுபோதையில் இருந்ததால் மழுப்பலாக பதில் அளித்ததாலும், வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் திருடன் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் மீது கொரட்டூர் , திருமங்கலம் போன்ற காவல்நிலையங்களில் 7- க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சுப்பிரமணியனை உடனடியாக அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், அவனது போதையை தெளியவைத்து விசாரித்த போது ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து திருட சென்ற வீட்டில்,

தூங்கி கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும், சபலத்தில் சில்மிசத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர்.















