உல்லாசத்தின் போது அந்த இடத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கள்ளக்காதலி : அலறி துடித்த கள்ளக்காதலன்.. நடந்த விபரீதம்!!

693

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த கண்ணுமேய்க்கிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (36).

இவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

நெருக்கத்தை பயன்படுத்தி கொண்டு மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை முத்துக்குமார் வாங்கியுள்ளார். இதை திருப்பி கேட்ட போது அவர் தர மறுத்துள்ளார்.


மேலும் அடிக்கடி பணம் கேட்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான தவசிபட்டி செல்லும் காட்டுப்பகுதிக்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது, மகேஸ்வரி பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை இடுப்புக்கு கீழ் பகுதியில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால், படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்தனர். பா.லி.ய.ல் தொ.ல்.லை மற்றும் பணம் கேட்டு டார்ச்சர் செய்த விவகாரத்தில் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.