சொல்ல சொல்ல கேக்கலியே.. மோசமா டிரஸ் அணிந்த மனைவி.. கடுப்பில் கணவர் செய்த கொடூரம்!!

1127

உத்தரப்பிரதேசம்…

உத்தரப்பிரதேசம் மாநிலம் பர்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்டது காஜிபூர் என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் மோஹித் குமார். இவரது மனைவி பெயர் சப்னா. 28 வயதாகிறது.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இத்தனை வருடமாக மகிழ்ச்சியுடன் இவர்கள் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென சப்னாவின் டிரஸ் மூலம் தகராறு வெடித்துள்ளது.

சப்னா, கிளாமராக மார்டன் டிரஸ் அணிய ஆரம்பித்துள்ளார். சப்னா இப்படி ஆடை உடுத்துவது மோஹித்துக்கு பிடிக்கவில்லை. அதனால், இது தொடர்பாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுகூட, தகாத முறையில் சப்னா ஆடை உடுத்தியதாக தெரிகிறது.


இதனால், மறுபடியும் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோஹித், கத்தியை எடுத்துவந்து சப்னாவின் கழுத்தில் ஆவேசமாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் சப்னா அங்கேயே சரிந்துவிழுந்தார். சப்னாவின் அலறல் கேட்டு, பக்கத்து வீட்டு நபருக்கு சந்தேகம் வந்தது.

அதனால், வீட்டுக்குள் வராமல் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோதுதான், சப்னா இறந்துகிடந்தது தெரியவந்தது. சப்னாவின் சடலம் பக்கத்திலேயே, வெறித்து பார்த்தபடி, மோஹித் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாராம்.

இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போதுதான், மோஹித் எல்லா விவரங்களையும் சொல்லி உள்ளார்.. வீட்டிற்குள் எப்படி வேண்டுமானாலும் டிரஸ் செய்து கொள்ளட்டும் ஆனால், பொது இடங்களில் தகாத முறையில் டிரஸ் அணிய வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் சப்னா கேட்வில்லை. ஆரம்பத்தில் அட்வைஸ் செய்தேன்.

நாளடைவில்தான் அது தகராறாக உருவெடுத்துவிட்டது.. அந்த தகராறில்தான் ஆத்திரத்தில் கொ.லை செய்துவிட்டதாகவும் மோஹித் போலீசிடம் வாக்குமூலம் தந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும் ஆடை அணிவது தொடர்பாக, தொடர்ந்து இளம்பெண்கள் கொ.ல்.லப்பட்டு வருவது கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகின்றன.