9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம்.. ஏமாற்றிய கல்லூரி மாணவனுக்கு இறுதியில் நடந்த பரிதாபம்!!

3461

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.

மேலும் வயிறு வலிக்கிறது என கூறியதால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனைகேட்டு பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது, கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் லோகநாதன் (21) என்பவர் தான் காரணம் என மாணவி கூறியுள்ளார்.


பின்னர் மாணவியின் தந்தை இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், லோகநாதனை கைது செய்து விசாரணை நடத்தினர். லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனது உறவினர் வீட்டுக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் வசித்துவந்த மாணவியிடம் பழகியுள்ளார்.

பின்னர் மாணவியிடம் செல்போன் எண்ணை பெற்று பேசிவந்துள்ளார். ஒரு கட்டத்தில் பரிசு பொருள்கள் வாங்கிக் கொடுத்து நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் லோகநாதன் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியிடம் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.