சேலத்தில்..

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சம்பத்குமார் – சரஸ்வதி தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சேடப்பட்டியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரியும் அமிர்தவல்லி என்பவருடன் சம்பத்குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அமிர்தவள்ளி, சம்பத்குமார் இடையே கடந்த 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

கணவனை இழந்த அமிர்தவள்ளி ஒரு மகனுடன் வசித்து வருகிறார் வருகிறார். இந்நிலையில் சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

எப்போதும் கள்ளக்காதலி வீட்டிலேயே இருந்துள்ளார். சென்னையில் விடுப்பு பெற்றுக்கொண்டு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுவிடுவதாகவும், மனைவி, குழந்தைகளை பார்க்க செல்வதில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த சரஸ்வதி, சம்பவத்தன்று அமிர்தவள்ளி வீட்டில் கணவர் இருப்பது தெரியவந்ததால் கணவனை தேடி அங்கு சென்றுள்ளார். மனைவியை பார்த்தவுடன் அங்கிருந்து போலீஸ் ஏட்டு சம்பத்குமார் வெளியே ஓடியுள்ளார்.

பின்னர் வீட்டில் புகுந்த சரஸ்வதியை அமிர்தவள்ளி தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் தாக்கியதால் இருவரும் காயம் அடைந்து ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ஆனால் மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கள்ளக்காதலால் குடும்ப செலவிற்கு கூட பணம் தராமல் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.து.ம்,

கணவர் மற்றும் கணவரின் கள்ளக்காதலி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரஸ்வதி தனது 3 குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.















