4ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த பெற்றோர் : நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

544

திருவள்ளூரில்..

இன்றைய தலைமுறை பிள்ளைகள் தொட்டாற்சிணுங்கிகளாக உள்ளனர். பெற்றோர், ஆசிரியர், உறவினர் யாரும் திட்டக்கூடாது. வேண்டியதை கேட்ட போது வாங்கி தர வேண்டும்.

இல்லையெனில் மன அழுத்தம் எனக் கூறிக்கொண்டு எதாவது அசம்பாவிதங்களில் இறங்கி விடுகின்றனர். ஒரு பிள்ளை, 2 பிள்ளை என வைத்திருப்பதால் பெற்றோர்களும் பிள்ளைகளின் ஆசைகளுக்கே விட்டு பின் அவதிப்படுகின்றனர்.

பெற்றோர்களுக்கு அடங்கிய கடைசி தலைமுறை மட்டுமல்ல பிள்ளைகளுக்கும் அடிமை வேலை செய்யும் தலைமுறை நாமாக தான் இருக்கிறோம். பெற்றோர்கள் பாடு பெரும் திண்ட்டாட்டம் ஆகி வருகிறது.


திருவள்ளூர் மாவட்டம் , பெரிய குப்பத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் 10 வயது பிரதிக்க்ஷா தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு சிறுமி பிரதிக்க்ஷா அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மாமியார் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தார். தேர்வு நெருங்கி விட்டதால் விளையாடப்போகக் கூடாது வீட்டில் உட்கார்ந்து படி எனக் கூறினார் .

வீட்டிற்கு சென்று படிக்க சொன்னார். கிருஷ்ணமூர்த்தி, தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது மகள் பிரதிக்ஷா வீட்டு ஜன்னலில் துண்டில் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகளை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பலனின்றி மாணவி பிரதிக்க்ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை படிக்குமாறு கூறி கண்டித்ததால் மன அழுத்தம் காரணமாக பிரதிக்க்ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

4ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.