“ஐயோ வர்றது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே”.. தாலி கட்டும் நேரத்தில் வெலவெலத்துப்போன போலீஸ்காரர்… நடந்த அதிரடி சம்பவம்!!

832

கடலூர்…

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி என்ற பகுதி அமைந்துள்ளது… இங்கு வசித்து வரும் ராம்குமார்.. 30 வயதாகிறது.. திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் சபீதா.. ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர்.. கடந்த 2019-ம் ஆண்டு இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களின் திருமணவாழ்க்கையில், திடீரென புயல் வீச துவங்கிவிட்டது.. கருத்து வேறுபாடு காரணமாக 2 பேருக்குமே அடிக்கடி தகராறு வந்தநிலையில், கடந்த சில மாதங்களாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்… ஆனால் விவாகரத்து எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில், ராம்குமார் வேலை பார்த்துவரும் பேரளம் போலீஸ் ஸ்டேஷனில் ரம்யா என்பவர் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.. இவர், மயிலாடுதுறை மாவட்டம் திருவேற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்.. ஒரே ஸ்டேஷனில் போலீஸ்காரர்கள் என்பதால், இருவருமே நெருங்கி பழகியுள்ளனர்.. அதுவே காதலாக மாறிவிட்டது..


ரம்யாவுடன் பழக துவங்கியதுமே, மனைவி சபிதாவை அதிகமாக வெறுக்க துவங்கினார்.. முழுமையாக அவரை பிரியவும் நினைத்த ராம்குமார்.. ஆனால், விவாகரத்து பெறாமல், ரம்யாவை திருமணம் செய்ய முடியாது என்று யோசித்தவர், போலியாக விவாகரத்தை பெற முயன்றார்..

அதாவது, மனைவி சபிதா தன் வீட்டில் இருக்கும்போதே அவரது பெற்றோர் வீட்டில் உள்ளதை போன்று, ஆலப்பாக்கம் அட்ரஸூக்கு விவாகரத்துக்கான நோட்டீஸை அனுப்பியுள்ளார். ஆனால், இந்த விஷயம் தெரியாமலேயே சபிதா, கணவர்மீது வழக்கமான கோபத்துடன், தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு நிஜமாகவே சென்றுவிட்டார்..

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்..கட்டு கட்டாக 100 மாணவிகள் புகார்.. மகளிர் ஆணைய தலைவி குமாரி பகீர் கலாஷேத்ரா பாலியல் விவகாரம்..கட்டு கட்டாக 100 மாணவிகள் புகார்.. மகளிர் ஆணைய தலைவி குமாரி பகீர்

இதையே சாக்காக பயன்படுத்தி கொண்டு, சபிதாவுக்கு தெரியாமலேயே மயிலாடுதுறை கோர்ட்டில் ஒருதலைபட்ச தீர்ப்பாக விவாகரத்து பெற்றுவிட்டார் ராஜ்குமார். இப்போது, தன்னுடன் பணிபுரியும் ரம்யாவை கல்யாணம் செய்ய ப்ளான் போட்டார்.

அதன்படி சம்பவத்தன்று திருவெண்காடு கிராமத்தில் உள்ள கோயிலில் உறவினர் முன்னிலையில் திருமண ஏற்பாடுகள் செய்தார் ராம்குமார்.. அதற்குள் இந்த விஷயம் சபிதாவின் காதுகளுக்கு எட்டிவிட்டது.. இதனால், உடனடியாக தன்னுடைய பெற்றோர் உறவினருடன் கோயிலுக்குள்ளேயே நுழைந்த சபிதா, திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்..

சுக்கிரன் பெயர்ச்சி 2023: ரிஷபத்தில் அமரும் காதல் நாயகன்..மாளவியா யோகத்தை அனுபவிக்கப்போவது யார்? சுக்கிரன் பெயர்ச்சி 2023: ரிஷபத்தில் அமரும் காதல் நாயகன்..மாளவியா யோகத்தை அனுபவிக்கப்போவது யார்?

கரெக்ட்டாக தாலி கட்டும் நேரத்தில் கல்யாணத்தை தடுத்து நிறுத்தினார். திடீரென சபிதாவை கோயிலுக்குள் பார்த்ததுமே ராஜ்குமாருக்கு வெலவெலத்து போய்விட்டது.. சபிதாவுக்கு எப்படி விஷயம் தெரிந்தது என்று குழம்பி போய் நின்றார். அதற்கு மேல் அங்கு நின்றால் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்த ராஜ்குமார், அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார்.

அவரை பார்த்ததுமே, மணப்பெண்ணுக்கும் பதற்றம் ஒட்டிக்கொண்டது.. எல்லாருமே அங்கே கூடியிருக்கும்போது, திடீரென தப்பித்து ஓடினார்.. ஓடும்போது, ரம்யாவையும் தன் கையோடு இழுத்துக் கொண்டு ஓடினார்.. இவர்களை விரட்டிக்கொண்டே ஒரு கும்பல் பின்னாடியே சென்றது.

ஆனால், அதற்குள் பக்கத்தில் இருந்து திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் மணமக்கள் தஞ்சமடைந்தனர்.. பதறிப்போய் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவர்களிடம் அங்கிருந்த போலீசார் விசாரித்தபோதுதான், இவர்கள் 2 பேருமே போலீஸ்காரர்கள் என்பது தெரியவந்தது..

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளிக்க அங்கிருந்த போலீஸ்காரர்கள் அறிவுறுத்தவும், அதன்படியே எஸ்பியிடம் புகார் தந்தார் ராஜ்குமார். அதேபோல, தன்னுடைய கணவர் மோசடியாக விவகாரத்து பெற்று வேறொரு திருமணம் செய்ய முயன்றதாக சபிதாவும் எஸ்பியிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, இரு தரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.