பாம்பை வெட்டி சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்: வைரலான வீடியோ காட்சிகள்!!

525

தமிழகத்தில்……….

தமிழகத்தில் பாம்பை வெட்டி சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சேலத்தின் மேட்டூர் நகராட்சி பகுதிகளில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.

அந்த வீடியோவில், தங்காபுரி பட்டிணம் வட பத்ர காளியம்மன் கோவில் பகுதியில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து பாம்பை வெட்டி சமைத்து சாப்பிடுவது போன்ற காட்சிகள் இருந்தது.

இந்த வீடியோவை இளைஞர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வைரலானது தெரியவந்தது.


இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை சமையல் செய்து சாப்பிட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் சமூக விரோதிகள் மது அருந்துவது சீட்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும்,
பொலிஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.