13 வயது சிறுமி பரிதாபமாக மரணம்.. விளையாடிய போது நடந்த சோகம்!!

571

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பைபாலம் கிராமத்தில் லகபதி – வசந்தி தம்பதியின் மகள் ஸ்ரவந்தி. இவர் மரிபெடா தண்டாலில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே போல் இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் அன்னு என்ற மகனும் உள்ளார்.இந்நிலையில், ஸ்ரவந்தி கடந்த வியாழக்கிழமையன்று பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டின் அருகே தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் லேசாக சிரமம் இருந்துள்ளது. தொடர்ந்து மறுநாள் அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக தனது பாட்டியிடம் இதனைக் கூறினார். சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்ததால், அவரது பாட்டி சிறுமியின் தந்தை லகபதிக்கு தகவல் தெரிவித்தார்.


அவர் உடனடியாக தனது மகளை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.13 வயது சிறுமி மாரடைப்பால் இறந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.