அமெரிக்கா….

சில ஆண்டுகளாக திருமணம் முடிந்த பிறகும் அதற்கும் முன்பும் நடத்தம் போட்டோசூட் பிரபலமாகி வருகிறது. தண்ணீருக்குள் படகில் சென்றும், சாலையில் நின்றும், உயரமான கட்டடத்துக்கு சென்றும் என பல்வேறு விதமான இடங்களில், விதவிதமாக ஆடைகள் அணிந்து போட்டோசூட் நடத்துகின்றனர்.

ஆனால் இங்கு தனது விவாகரத்தை பெண் ஒருவர் கொண்டாடி போட்டோசூட் நடத்தி அனைவரையும் வியப்படையச் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த லாரன் புரூக்(31) என்ற பெண் ஒருவர், போட்டோஷூட்டில் ஒன்றில் அவரது திருமண ஆடையை எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.

லாரன் புரூக் என்ற பெண்ணிற்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி பந்தத்திற்கு பிறகு செப்டம்பர் 2021ஆம் ஆண்டு கணவரிடமிருந்து பிரிந்தார். இதையடுத்து கடந்த ஜனவரியில் லாரன் புரூக்கிற்கும் அவரது கணவருக்கும் சட்டப்படி விவாகரத்து முடிந்துள்ளது.

இதனை தற்போது லாரன் புரூக் கொண்டாடி தீர்த்துள்ளார். லாரன் புரூக் மேற்கொண்ட போட்டோஷூட் ஒன்றில், அவரது திருமண புகைப்படத்தை கிழித்ததுடன் திருமண ஆடையை தீயில் எரித்து விவாகரத்தை கொண்டாடியுள்ளார். அதோடு திருமண போட்மோ ஆல்பத்தை காலால் மிதித்தும் தனது வெறியை தீர்த்துக்கொண்டார்.

இது தொடர்பாக லாரன் புரூக் வழங்கியுள்ள விளக்கத்தில், விவாகரத்து என்பது கடினமானது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேதனையானது என்ற உண்மையை காட்டுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தினமும் காலை எழுந்ததும் அழும் நாட்கள் உண்டு, வாழ்க்கை முன்னேறவே முன்னேறாது என்று நினைத்து வருந்திய நாட்கள் உண்டு. இப்போது நான் காலையில் எழுந்து அழுவதில்லை, மிக சிறப்பாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.















