கழிவு நீரில் தேநீர்.. 26 நாட்கள் சிறை.. ஷார்ஜா சிறையில் சிக்கி கொண்ட பிரபல நடிகை.. நடந்தது என்ன?

4064

மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போரிவிலியைச் சேர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா பாட்லா ஹவுஸ். இவர் சதக் 2, திங்கிஸ்தான் போன்ற பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்த சூழலில் அவர் அண்மையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷார்ஜா சென்றிருந்த நடிகை கிறிசன் பெரேரா, அங்கு தான் வைத்திருந்த கோப்பையில் போதைப் பொருள் வைத்திருந்ததை அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்ததையடுத்து கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், 26 நாட்கள் சிறையில் இருந்த போது அனுபவித்த கொடுமைகளை வெளியிட்டு கண்ணீர் வடித்துள்ளார். டைட் டிடர்ஜெண்ட் பயன்படுத்தி தலைக்கு குளித்ததாகவும், கழிப்பறை தண்ணீரைப் பயன்படுத்தி காபி தயாரித்ததாகவும் கூறியுள்ளார்.


அந்தக் கடிதத்தில், சிறையில் பேனா மற்றும் காகிதத்தைக் கண்டுபிடிக்க எனக்கு 3 வாரங்கள் ஆனது. டாய்லெட் தண்ணீரைப் பயன்படுத்தி காபி தயாரித்த பிறகு, நான் பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்தேன்.

சில சமயங்களில் என் லட்சியம் என்னை இங்கு கொண்டு வந்ததை அறிந்து கண்களில் கண்ணீருடன் இருந்தேன். நான் சில சமயங்களில் நமது கலாச்சாரம், நம் திரைப்படங்கள் மற்றும் டிவியில் தெரிந்த முகங்களைப் பார்த்து சிரித்தேன். நான் ஒரு இந்தியனாகவும், இந்தியத் திரையுலகை சேர்ந்தவளாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்திருந்த எனது அம்மா, அப்பா, நண்பர்கள், ஊடகங்கள், காவல்துறை உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவுகின்ற உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய எனது கதையை ட்வீட் செய்து மறுபகிர்வு செய்த அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்.

நாம். ஒரு பெரிய சக்தி வாய்ந்த தேசம். நான் வீட்டிற்கு திரும்ப காத்திருக்க முடியாது. இந்த மோசடியில் சிக்கிய எனது உயிரையும் மற்ற அப்பாவி மக்களின் உயிரையும் காப்பாற்றியதற்கு நன்றி. எப்போதும் நீதி வெல்லட்டும், என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை கிறிசன் பெரேரா கடந்த புதன்கிழமை மாலை விடுவிக்கப்பட்டார். விரைவில் இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.