வாட்ஸ்அப் குரூப் மூலம் பாலியல் தொழில்.. அதிர வைக்கும் பிண்ணனி!!

549

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழகத்தையே உலுக்கிய பல்வேறு பாலியல் தொடர்பான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, வாடகை வீட்டில் பெற்ற மகளையே தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை, பெண்களுடன் உல்லாசமாக இருந்து பணம் பறித்த காசி விவகாரம், அண்மையில் பாதிரியார் விவகாரம் போன்ற சம்பவங்கள் அதிரவைத்தன.

இந்த வகையில், தற்போது நடந்த சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு புகார் குவிந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் பல்வேறு இடங்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த பெண்களை போலீசார் மீட்டு, அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்தநிலையில் குழித்துறை பகுதியிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு புகார் சென்றது.


இதையடுத்து பம்மம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 2 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது அம்பலமானது. மேலும் அவர்களுடன் 4 பேர் இருந்தனர்.

இதனையடுத்து 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஒருவர் பெங்களூரையும், மற்றொருவர் தஞ்சாவூரையும் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரியவிளையை சேர்ந்த சுனில் அப்பலோஸ்(45), குழித்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான நாராயணன் நாயர்(59) என்பதும் தெரியவந்தது.

சுனில் அப்பலோஸ் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். இருவரும் சேர்ந்து விஐபிக்களை வீட்டுக்கு அழைத்து பெண்களிடம் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக வாட்ஸ்அப் குழுவை தொடங்கி வாடிக்கையாளர்களாக சேர்த்து தொழிலை நடத்தி வந்ததும் அம்பலமாகியுள்ளது. பணம் தராமல் ஏமாற்றி விடாமல் இருக்க பெண்களிடம் செல்லும்முன்பே கூகுள்பே மூலம் முதலில் பணத்தை பெற்று உறுதி செய்தனர்.

மீட்கப்பட்ட பெண்கள் இருவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.