உல்லாசமாக இருக்கும் போது இடையூறு செய்த குழந்தை… கள்ளக்காதல் ஜோடி செய்த கொடூரம்!!

3302

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மல்லேஷ்(32), என்பவர் மனைவி, குழந்தைகளுடன் வசித்த வந்துள்ளார். இவர், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி, செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.

அதே சூளையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி கலைவாணி(27), ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலை செய்தனர்.

இந்நிலையில், கலைவாணியுடன் மல்லேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இனி மறைந்து தனிமையில் சந்திக்க வேண்டாம் என முடிவுசெய்து கடந்த மாதம், கலைவாணி கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு, மல்லேசுடன் ஓட்டம் பிடித்தார். பின்னர், ஓமலூர் அருகே புதூர்காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில், கணவன் -மனைவி எனக் கூறி, வேலைக்கு சேர்ந்துள்ளனர்.


இந்நிலையில், வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை, தன்னால் வளர்க்க முடியாது என மல்லேஷ் கூறிவந்துள்ளார். அன்றிரவு இருவரும் மது குடித்து விட்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் குழந்தை அழவே, ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து, குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துள்ளனர். இதில், காயமடைந்த குழந்தையை மறுநாள் ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை நேற்று உயிரிழந்தது. கலைவாணி- மல்லேஷ் மீது சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில், தாரமங்கலம் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடகாவுக்கு தப்பிய இருவரையும் அங்கு சென்று பிடித்து வந்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கலைவாணிக்கு ஏற்கனவே 3 கணவர்கள் இருந்ததும், அவர்களை பிரிந்து வந்து, 4வதாக மல்லேஷூடன் குடும்பம் நடத்தியதும் கடந்த 1ம் தேதி இருவரும் போதையில் இருந்த போது, குழந்தை அழுததால் சுவற்றில் வீசி அடித்ததும் தெரிய வந்தது.