16 வயது மகளுடன் வசித்து வந்த 40 வயது ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம்!!

498

இந்தியா…….

இந்தியாவில் 16 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் நிவேதா மேஜர் (40). இவர் பள்ளிக்கூட ஆசிரியையாக உள்ளார்.

 

இவர் தனது 16 வயது மகள் தெல்சியா (16) உடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தாயும், மகளும் சில தினங்களுக்கு முன்னர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு மர்ம நபர்கள் வேறு இருசக்கர வாகனத்தில் அவர்கள் அருகில் வந்த நிலையில் தாய் மற்றும் மகளை துப்பாக்கியால் சுட்டனர்.


இதில் மூன்று குண்டுகள் நிவேதா நெஞ்சு பகுதியை துளைத்த நிலையில் இரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்தனர்.

துப்பாக்கி குண்டு தெல்சியா மீதும் பாய்ந்தது. இருவரின் நிலையை கண்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிவேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

தெல்சியாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.