செல்போனால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

702

சென்னை…

சென்னை பொத்தேரி ரயில் நிலையம் அருகே பல்லவன் விரைவு ரயில் மோதி தனியார் பல்கலைக்கழக மாணவி கிருத்திகா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தாம்பரம், பெங்களத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகள் நடடைபெற்ற வண்ணம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் B.optom 3ம் ஆண்டு படித்து வரும் மாணவி கிருத்திகா. இவர் பெருங்களத்தூரில் வசித்து வருபவர்.

இவர் தினமும் கல்லூரிக்கு ரயிலில் வந்து செல்வது வழக்கம். வழக்கம் போல் கல்லூரி முடிந்த நிலையில் மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையத்திற்கு வந்தார். பல்லவன் விரைவு ரயில் வந்து கொண்டிருந்த போது மாணவி கிருத்திகா மீது மோதியது.


இதனால் உடல்சிதறி மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே போலீசார் கிருத்திகாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்போன் பேசிய படி தண்டவாளத்தை கடந்து சென்றதால் இந்த விரைவு ரயில் வந்ததை கிருத்திகா கவனிக்கவில்லை. இதனால் ரயில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.