பட்டப்பகலில் பயங்கரம்.. டீ குடித்து கொண்டிருந்தவருக்கு நடந்த கொடூரம் : பதற வைத்த சம்பவம்!!

637

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பெரியார் நகர் பகுதியில் மக்கள் கூடும் இடத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டீக்கடையில் இளைஞர் ஒருவர் நின்றுள்ளார்.அப்போது, பைக்கில் வந்து இறங்கிய இருவர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, டீக்கடையில் நின்றுக்கொண்டிருந்த இளைஞரை தாக்கினர்.

அவர் சுதாகரித்து தப்பியோடுவதற்கு முன்பாக இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரிவாளால் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து இருவரும் தலைமறைவாகினர். பின்னர் அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.


ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாத் தலைமையில் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலக் (25) என்பது தெரியவந்தது. சொப்பட்டி கிராமத்திதை சேர்ந்த ஸ்ரீ ராம் சேனா ஒசூர் நகர செயலாளராக இருந்த மோகன்பாபு(25) என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் திலக் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மோகன்பாபு கொலைக்கு பழிக்கு பழி தீர்க்கும் விதமாக நடந்துள்ளது என்கின்றனர். திலக் உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து ஓசூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட படுகொலைக்கு பழிக்கு பழியாக தற்போது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.