கண்ணுக்கு மேல் கிளிப் மாட்டியது போன்ற உணர்வுடன் தூக்கத்திலிருந்து விழித்த பெண்: உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

559

அவுஸ்திரேலியா……….

அவுஸ்திரேலியாவில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது கண்ணுக்கு மேல் கிளிப் மாட்டியது போல் ஏதோ தெரிய, கண் விழித்த பெண் ஒருவர் அது என்ன என தெரியவந்தபோது திடுக்கிட்டுப்போயிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவின் Coolalinga என்ற பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வாழும் Emily Hinds (42) என்ற பெண் திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து விழித்துள்ளார்.

 

வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் ஏதோ கிளிப் மாட்டியிருப்பது போல் தோன்ற, கண்ணை விழித்துப் பார்த்தால், பாம்பு ஒன்று நெற்றியைக் கவ்விப்பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது.

அது ஒரு பாம்பு என்பதை உணர்ந்ததும் பதறியடித்து கணவர் Jasonஐ எழுப்பினால், அவர் நம்பவில்லையாம்.


பின்னர் லைட்டைப் போட்டுப் பார்க்கும்போது, 24 இன்ச் நீள பாம்பு ஒன்று தலையணைக்கு மேல் ஊர்ந்து செல்வதை இருவரும் பார்த்திருக்கிறார்கள்.

நல்லவேளையாக அது விஷப்பாம்பு அல்ல, என்றாலும், கடிபட்டதால் நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழைய வாய்ப்புள்ளது என்பதால் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் Emily.

நடந்ததை எண்ணி பயப்படுவார் என்று பார்த்தால், எல்லோருக்கும் சொல்வதற்கு என்னிடம் விறுவிறுப்பான ஒரு கதை இருக்கிறது என்கிறார் Emily.