கள்ளக் காதலியின் நடத்தையில் சந்தேகம்.. கடற்கரைக்கு அழைத்துச் சென்று காதலன் செய்த கொடூரம்!!

7173

விசாகப்பட்டினத்தில்…

விசாகப்பட்டினத்தில் காதலி வேறு ஒருவருடன் உறவில் இருந்து வருகிறார் என்கிற சந்தேகத்தில் காதலன் கடற்கரைக்கு தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம் பெண் சிராவணிக்கு பிரேம் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விசாகப்பட்டினத்தில் ஜெகதம்பா பகுதியில் இருக்கும் செருப்பு கடையில் அந்த சிராவணி வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் சிராவணிக்கு ஓவியர் கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

கோபாலும்சிராவணியும் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார்கள் . பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஸ்ரவானியின் நடவடிக்கை மீது கோபாலுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது . அவர் வேறு யாருடனும் கள்ள உறவில் இருப்பதாக கோபால் சந்தேகப்பட்டு இருக்கிறார் .


சிராவணி வேறு சில ஆண்களுடன் பேசி வந்ததாகவும், இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் பலமுறை கோபால் கண்டித்தும், அவர் தனது ஆண் நண்பர்களிடம் தொடர்ந்து பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வெங்கி என்பவர் உடன் பழக்கத்தில் இந்திருக்கிறார் என்று தெரிந்து அவருடன் பழகக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.

ஆனால் கோபால் சொன்னதை கேட்காமல் மெசேஜ் மூலமாகவெங்கி உடன் பேசி வந்திருக்கிறார் . இதை பார்த்து விட்ட கோபாலுக்கு ஆத்திரம் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து அடிக்கடி அவரிடம் கேட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார்.

இதன் பின்னர் சிரவாணியை கொலை செய்து விட முடிவு எடுத்திருக்கிறார் கோபால். இதனால் கடற்கரை சாலையில் கோகுல் பார்க் பகுதிக்கு சிரவாணியை அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு சென்றதும் வெங்கியுடன் பழகுவது குறித்து பேசி இருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரமடைந்து சிரவாணியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.பின்னர், கோபால் தானாகவே கஜுவாக நகரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று பெண்ணை கொலை செய்து விட்டதாக சொல்லி சரணடைந்திருக்கிறார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.