தர்காவில் கேட்ட அலறல் சத்தம்.. ஓடிவந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

574

திருநெல்வேலி..

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான்.. 34 வயதாகிறது.. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சஜிதா பேகம்.. 25 வயதாகிறது..

2 குழந்தைகள்: இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது.. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சமீபகாலமாகவே, இம்ரான்கானுக்கும், சஜிதாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறுகள் வெடித்து வந்துள்ளன.

அடிக்கடி சண்டை வந்துவிடவும், ஒருகட்டத்தில் வெறுப்படைந்த சஜிதா பேகம், தன்னுடைய அம்மா வீட்டுக்கு கிளம்பி வந்துவிட்டார்.. சிலகாலமாகவே, அம்மா வீட்டில்தான் தங்கியிருக்கிறார்.. இவ்வளவு நாள் இல்லாமல், நேற்றைய தினம், மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார்.


இம்ரான்கான்.. சஜிதாவை சமாதானப்படுத்தினார்.. இனிமேல் ஒற்றுமையாக இருக்கலாம் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. இறுதியில், ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்து, வெளியே அழைத்து வந்துள்ளார்.

தாய்வீடு: பைக்கில் சஜிதாவை ஏற்றிக்கொண்டு, டவுன் பகுதியில் இருந்து, தர்காவுக்கு அழைத்து சென்றுள்ளார்.. குளத்தங்கரை முகைதீன் மீரா சாகிபு தர்காவானது, பேட்டை செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது..

அங்கு சஜீதா மனமுருகி பிரார்த்தனை செய்தார்.. அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜிதா பேகத்தை சரமாரியாக குத்தினார் இம்ரான்கான்.. இதில் வலி பொறுக்க முடியாமல் கதறி துடித்தார் சஜிதா.. ஆனால், எதுவுமே தெரியாததுபோல், அங்கிருந்து வெகு இயல்பாக வெளியே வந்து, பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி சென்றார் இம்ரான்கான்.

தர்காவில் கதறல்: தர்காவில் அலறல் சத்தம் கேட்டு, எதிர்கடையில் இருந்த சிலர் போட்டோக்களை எடுத்தனர்.. மேலும் சிலர் உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தந்தனர்.

மேலும் சிலர் உடனடியாக ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த சஜிதா பேகத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பவும் முயற்சி எடுத்தபோது, பேட்டை போலீசார் விரைந்து வந்துவிட்டனர்.. சஜிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையையும் கையில் எடுத்தனர்.. தப்பியோடிய இம்ரான்கானை தேடும் முயற்சியிலும் இறங்கியபோதுதான், திடீரென இம்ரான்கான் நெல்லை டவுன் போலீசில் தானாகவே வந்து சரணடைந்துள்ளார்.. ஆனால், இவர் எதற்காக மனைவியை கொலை செய்தார் என்று இதுவரை தெரியவில்லை.. அதுகுறித்த விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது.

மனநிலை மாற்றம்: ரியல் எஸ்டேட் செய்துவருபவராம் இம்ரான் கான்.. இவரது தொழிலில் சறுக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளது.. இதுவே குடும்பத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்திருப்பதாக தெரிகிறது.

குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு, சஜிதா தன்னுடைய அம்மா வீட்டுக்கு பிரிந்து சென்ற நிலையில், இம்ரான் கானின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாம்.. நாளுக்கு நாள் அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாகவும் இருந்திருக்கிறது. அதனால், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்திருக்கிறார்கள்..

சந்தேகமா? இதற்கு நடுவில்தான், இப்படி ஒரு கொடூரத்தை அவர் செய்திருக்கிறார்.. போலீசில் சரணடைந்த இம்ரான்கான், சஜிதாவை சந்தேகத்தின் காரணமாகவே, கொலை செய்ததாக கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.. இப்போதைக்கு அவரை சிறையில் வைத்துள்ள நிலையில், போலீசாரின் விசாரணை தீவிரமாகி கொண்டிருக்கிறது.. இதற்கு பிறகுதான், சஜிதா கொலைக்கு உண்மையான காரணம் தெரியவரும் என்கிறார்கள்.