முதலாளியைக் கொன்று உடல் பாகங்ககளை சூட்கேஸில் அடைத்த காதல் ஜோடி.. வெளியான திடுக்கிடும் தகவல்!!

6803

கேரளாவில்..

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (58). இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். சித்திக்கை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரக்கோரி சித்திக் மகன் நவ்ஷத் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.எனினும் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என போலீசாருக்கு எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அட்டப்பாடி பகுதியில் கால்வாயில் சந்தேகப்படும்படி சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் ஆற்று பகுதியில் கிடந்த சூட்கேஸை மீட்டு திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சூட்கேசில் துண்டு துண்டாக உடல் வெட்டப்பட்டு சித்திக் கொலை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் சித்திக்கை அவருக்கு தெரிந்தவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியது. அவரது குடும்பத்தினர் சிலரிடம் விசாரணை நடத்தினர். பின்னர். சித்திக்குக்கு சொந்தமான உணவகத்தில் பணியாற்றி வந்த சிபில் (36), பர்ஹானா (34) என்ற பெண் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி, சித்திக்கின் ஹோட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தோம். ஆனால் கடந்த 18ஆம் தேதி சித்திக் எங்களை வேலையில் இருந்து நீக்கினார். இதனால் வருமானம் இன்றி தவித்தோம். இந்த கோபத்தில் அவரிடம் இருந்து பணம் பறிக்கவும், கொலை செய்யவும் திட்டமிட்டோம்.

இதற்காக கடந்த 23ஆம் சித்திக்கை அவரது காரிலேயே கடத்தி கோழிக்கோடு அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றோம். அங்குவைத்து அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, அகளி வனப்பகுதியில் வீசியதாக கூறினர்.

இதற்கு உதவியாக ஆஷிக் என்பரை அழைத்துக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். இதனை அடுத்து, ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்த குற்றத்திற்காக சிபில், பர்ஹானா, அவரது தம்பி ஆஷிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.