பனை மரம்……….

பொதுவாக மரத்தை கீழே இருந்து வெட்டுவது தான் வழக்கம். ஆனால் நபர் ஒருவர் பனை மரத்தின் உச்சியில் ஏறி அதனை வெட்டுகிற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை, ரெக்ஸ் சேப்மேன் என்ற கூடைப்பந்தாட்ட வீரர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், பனை மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் மரத்தின் மேல் பகுதியை வெட்டிவிடுகிறார். மரம் அங்கும் இங்கும் அசைகிறது. அதைப் பார்க்கும் நமக்கே பீதி ஏற்படுகிறது. ஆனாலும் அந்த நபர் நிலை தடுமாறாமல் மரத்தின் மீதே அமர்ந்துள்ளார்.

மரம் வெட்டிய நபரை பலரும் பாராட்டி உள்ளனர். ஆனால் இது ஆபத்தான முறை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Ever seen anyone cut a really tall palm tree?
Oh my god… pic.twitter.com/O0sde0ZCz0
— Rex Chapman?? (@RexChapman) September 25, 2020















