நாய்க்காக உயிரைவிட அண்ணன், தங்கை : நடந்த விபரீதம்!!

1180

கேரளா..

கேரளாவைச் சேர்ந்த இரண்டு அண்ணனும், தங்கையும் மும்பையில் உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.

மும்பை டோம்பிவிலியில் உள்ள கிழக்கு அனந்தம் ரீஜென்சி வளாகத்தில் வசிக்கும் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ரவீந்திரன் (22) மற்றும் கீர்த்தி ரவீந்திரன் (17) ஆகியோர் உயிரிழந்தனர்.

வளர்ப்பு நாயை குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நாய் நீரில் மூழ்கியது. அதனை மீட்கும் முயற்சியில், ரஞ்சித் ஈடுபட்டபோது அவரும் நீரில் மூழ்கினார்.


அதிர்ச்சியடைந்த கீர்த்தி அண்ணனை காப்பாற்ற முயன்ற நிலையில், இரண்டு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.