நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்… அவரின் உள்ளாடையில் இருந்த மர்மம்!!

7750

அகன்ஷா..

பிரபல நடிகையின் தற்கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது உள்ளாடை. அந்த உள்ளாடையில் விந்தணு இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் நடிகை அகன்ஷா தற்கொலை வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

போஜ்புரி மொழியில் பிரபல நடிகையாக இருந்தவர் அகன்சா துபே. உத்திர பிரதேச மாநிலத்தில் மிர்சாபூரைச் சேர்ந்தவர் அகன்சா துபே. சின்ன வயது முதல் நடனம் நடிப்பு மீது ஆர்வம் கொண்டிருந்த அகன்சா டிக் டாக் மூலம் பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் . அதன் மூலம் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

இதன் மூலம் அவர் மிகப் பிரபலமானார். இதை அடுத்து 17 வயதில் அவர் திரைப்படத்தில் அறிமுகமானார் . போஜ்புரி மொழி திரைப்படங்களில் அவர் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்த நிலையில் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தவர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரபல ஓட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


இவரின் மரணம் போஜ்புரி திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அகன்சாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் காதலர் சமர்சிங் மீதும் அவரின் சகோதரர் சஞ்சய் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் . இதன் பின்னர் அகன்சாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அகன்சாவின் தாயார் அளித்திருந்த வாக்குமூலத்தை போலீசார் இதுவரைக்கும் பதிவு செய்யாமல் இருக்கின்றார்கள். அதனால் இந்த வழக்கில் சந்தேகம் இருக்கிறது என்று வழக்கறிஞர் குற்றம் சாட்டி வந்த நிலையில், அகன்சாவின் உள்ளாடையில் விந்தணு இருந்தது தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் இது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அகன்ஷ்சாவின் உள்ளாடைகள் மற்றும் அவரது ஆடைகளில் விந்தணுக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இதனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அமர்சிங், சஞ்சய் சிங், சந்தீப் சிங் , அருண்பாண்டே ஆகியோரின் மாதிரிகள்,

அகன்சாவின் ஆடைகளில் காணப்படும் விந்தணுக்களுடன் ஒத்துப் போகின்றனவா என்பது குறித்து அறிய நான்கு பேருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட இருக்கின்றன.

 டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் காவல்துறை டிசிபி அமித் குமார் . உள்ளாடையில் விந்தணு இருப்பது கண்டறியப்பட்டிருப்பது நடிகை அகன்ஷ்சா தற்கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.