அந்தரங்க உறுப்பை கடித்து இளைஞரை கொன்ற நபர் : நடந்தது என்ன?

656

கேரளா..

கேரளாவை சேர்ந்த முனியசாமி (39) என்பவர், சென்னை ரெட்டேரியில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் பணி நேரம்போக மற்ற நேரங்களில் மது அருந்தும் பழக்கம் உடையவர். இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி முனியசாமி போதையில் மாதவரம் மேம்பாலம் அருகே நடந்துசென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள ஒரு கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் அந்தரங்க உறுப்பை முனியசாமி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த அவர் படுகாயமடைந்தார்.

பின்னர் அஸ்லாம் பாஷா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து ரெட்டேரி அருகே பாலாஜி என்பவரின் மர்ம உறுப்பையும் முனியசாமி கடித்து வைத்துள்ளார்.


இதில் பாலாஜி படுகாயமடைந்தார். இதுதொடர்பான புகாரில் முனியசாமி கைது செய்யப்பட்டார். பின்னர் நடத்திய விசாரணையில் அஸ்லாம் பாஷா உயிரிழப்புக்கும் இவர்தான் காரணம், அவரது அந்தரங்க உறுப்பை கடித்தது முனியசாமிதான் என்பது தெரியவந்தது.

பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் முனியசாமி வெளியே வந்தார். இந்த வழக்கு மாதவரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,

முனியசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து முனியசாமியை ஆஜர்படுத்த மாதாவரம் நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் முனியசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே உள்ள ஒரு வீட்டில் முனியசாமி பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.