வீடியோ காலில் அதிகாரி முன்பு முழு ஆடையை கழற்றிய இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!!

1079

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரை சேர்ந்த 39 வயது நபர் கார்பரேட் நிறுவன ஆலோசகராக உள்ளார். இவருக்கு கடந்த மார்ச் 17ஆம் தேதி அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து, வீடியோ கால் அழைப்பு வந்தது.

சிறிது யோசனைக்கு பிறகு அந்த காலை அட்டன் செய்தபோது, அதில் பெண் பேசினார். அப்போது, யார்? என்ன வேண்டும் ? என கார்பரேட் நிறுவன ஆலோசகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அப்பெண் திடீரென தனது ஆடையை கழற்றி விட்டு நிர்வாணமாக தோன்றினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்பரேட் நிறுவன ஆலோசகர் வீடியோகால் இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு பிறகு அவருக்கு ஆபாச பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தியாக வீடியோ ஒன்று வந்தது.

மேலும் ஆபாச பெண்ணுடன் அவர் பேசுவது போல சில ஸ்கிரீன் ஷாட்டுகளும் இருந்தன. அவற்றை உடனடியாக அந்த நபர் நீக்கினார். எனினும் இதுபோன்ற தகவலால் தனியார் நிறுவன ஆலோசகர் அதிர்ச்சி மற்றும் அச்சத்தில் இருந்துள்ளார்.


இந்தநிலையில் தான், மறுநாள் அவரை செல்போனில் தொடர்புகொண்ட ஒருவர், தான் டெல்லி போலீஸ் கமிஷனர் பேசுவதாக கூறினார். ஒரு பெண்ணை விபசார தொழில் வழக்கில் தேடி வருகிறோம்.

அந்த பெண் உங்களுடன் வீடியோவில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது, என கூறினார்.

இதனைகேட்டு ஆலோசகர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது, வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் தான் கூறும் நபரிடம் பேசும்படி தெரிவித்தார். அதன்படி கார்பரேட் நிறுவன ஆலோசகர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டார்.

அப்போது ரூ.50 ஆயிரம் தந்தால், அந்த வீடியோவை பதிவேற்றம் செய்யவிடாமல் பார்த்து கொள்வதாக கூறினார். ஆபாச வீடியோ என்பதால், செய்யாத குற்றத்துக்கு ஆலோசகர் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரத்தை அனுப்பி வைத்தார்.

ஆனால் அதோட விடாமல் அவரிடம் இருந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பணம் பெற்றனர். அந்த வகையில் தனியார் நிறுவன ஆலோசகர் ரூ.6.50 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

அதன்பின்னரும் பணம் கேட்டதால், இந்த மோசடி குறித்து அவர் காசர்வடவலி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 15 மர்ம நபர்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இப்படி ஆபாசமாக வீடியோ காலில் பெண்கள் தோன்றினால் உடனே போலீசில் தகவல் தெரிவிக்கவேண்டும் அல்லது அதன்பின்னர் தெரியாத எண்ணில் இருந்து வரும் தகவல்கள் குறித்த போலீசில் கூறவேண்டும் என தெரிவித்தனர்.