சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன்.. பகீர் வாக்குமூலம்!!

616

டெல்லியில்..

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை களையவும், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் செயல்படுத்தி வருகின்றன.

கிழக்கு டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கர்ப்பிணியான சிறுமி பரிசோதனைக்காக வந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்துசிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமியும் அவரது உறவினரான சிறுவனும் ஒருவரையொருவர் காதலித்து,

ஆகஸ்ட் 25, 2022ல் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. 2023 ஜனவரியில், டெல்லிக்கு வந்து மேற்கு ஜவஹர் பூங்காவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். தொடர் வயிற்றுவலியால் சிறுமி பரிசோதனைக்காக எல்பிஎஸ் மருத்துவமனைக்கு வந்தார்.


அவர் ஒரு மைனர் என்பதால் மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவம் தலைநகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிறுமி ஒருவருக்கு நடந்த கொடூரம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் பகுதியில் வசிக்கும் சிறுமி வயிறு வலிப்பதாக லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில் சிறுமி ஏழு கர்ப்பிணியான இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமியும் அவரது உறவினரான சிறுவன் ஒருவரும் காதலித்து வந்தனர்.  பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 தேதியன்று மேற்கு வங்கத்தில் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

இவர்கள் இந்த ஆண்டு ஜனவரியில், டெல்லிக்கு வந்து மேற்கு ஜவஹர் பூங்காவில் வாடகைக்கு வீடு கணவன், மனைவியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், சிறுமி வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை வந்தபோது கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமி மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் கைதான சிறுவன் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.