இளம் வயதிலேயே தேசிய வாலிபால் வீராங்கனை பரிதாபமாக பலி.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

877

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாலியத்(24). பிரபலமான வாலிபால் விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தார். தடுப்பாட்டத்தில் அணியின் வெற்றிக்கு பல முறை தன்னை அர்ப்பணித்துள்ளார் சாலியத்.

தேசிய வாலிபால் போட்டியில் வெள்ளிப்பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டலப் போட்டியில் தங்கப் பதக்கம், ஜூனியர் தேசிய போட்டியில் 3ம் இடம் என பல்வேறு சாதனைகள் சாலியத் வசம் இன்னும் யாராலும் தகர்க்கப்படாமலேயே இருக்கிறது.

கடந்த வருடம் திருமணமான சாலியத், திருமணத்திற்கு பின்னரும் கூட வாலிபால் விளையாட்டில் அதீத ஆர்வம் காட்டி, போட்டிகளில் பங்கேற்று வந்தார். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரில் கணவருடன் வசித்து வந்த சாலியத்திற்கு நேற்று முன் தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.


உடனடியாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணவர், சாலியத்தை சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனளிக்காமல் சாலியத் பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபால் விளையாட்டிற்கு வளர்ந்து வந்த சாலியத் மறைவு பேரிழப்பு.

கர்நாடக வாலிபால் ரசிகர்களிடையேவும், குறிப்பாக பெண்களிடையே சாலியத் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார். சானியா மிர்சா, சாய்னா நேவல் போன்று பிரபலமடைந்து, பெண்களை விளையாட்டின் பக்கம் அதிகளவில் ஈர்க்க வேண்டும் என்பதே தனது லட்சியம் எனக் கூறி வந்தவர் சாலியத்.