சபலத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: கொலை செய்தபின் விரல்களை வைத்து இளம்பெண்கள் செய்த மோசமான செயல்!!

518

சபலத்தால்…..

தன் மேல் இளைஞர் ஒருவருக்கு சபலம் இருப்பதை அறிந்த இளம்பெண் ஒருவர் அவரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

போர்ச்சுகல்லில் வாழும் Diogo Goncalves (21) என்ற இளைஞருக்கு Maria Malveiro (19) என்ற பெண் மீது சபலம் இருந்துள்ளது.

அதைப்பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த Maria, ஒரு நாள் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி Diogoவை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார்.

ஆசையுடன் சென்ற Diogoவுக்கு ஆரஞ்சுச் சாற்றில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, ஒரு நாற்காலியில் அமரவைத்து கட்டி, பின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார் Maria.


Maria ஒரு ஓரினச்சேர்க்கையாளர், அவர் தனது காதலியான Mariana Fonseca (23) என்ற செவிலியரின் உதவியுடன், Diogoவின் விரல்களை வெட்டி எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த விரல்களைப் பயன்படுத்தி Diogoவின் மொபைல் போனை இயக்கி அவர்து வங்கிக்கணக்கிலிருந்த 60,000 பவுண்டுகளை எடுத்துக்கொண்டுள்ளார்கள் அந்த பெண்கள்.

பல நாட்கள் அவரது உடல் பாகங்களை தங்கள் வீட்டிலேயே வைத்திருந்துவிட்டு, பின்னர் அவரது உடலை காரில் ஏற்றி மலை விளிம்பு ஒன்றிலிருந்து கடலில் வீசி எறிந்து, காரை கடலை நோக்கி நிறுத்தி அவர் தற்கொலை செய்துகொண்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, Diogoவின் உடல் கடலில் விழாமல் பாறையிலேயே சிக்கிக்கொண்டிருக்கிறது.

 

பின்னர், தங்கள் வீட்டிலிருந்த Diogoவின் மற்ற உடல் பாகங்களை தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் வீச, அவைதான் இந்த பெண்கள் இருவரையும் சிக்கவைத்துள்ளன.

வசமாக சிக்கிக்கொண்ட இரு பெண்கள் மீதும் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவர் மீதான விசாரணை துவங்க உள்ளது.