லிவிங் டூ கெதரில் இருந்த இளம் பெண் கொடூரமாக கொலை.. நடந்தது என்ன?

696

கர்நாடகாவில்..

அகான்ஷா என்ற 23 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் பணியாற்றிய ஆர்பித் ( 27 ) என்பவருடன் அகான்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

முதல் நட்பாக பழகினாலும் அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தனர்.

ஆனால் சிறிது காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் அகான்ஷாவுடன் கடந்த கடந்த 5 ஆம் தேதி ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. இருவரும் மாறிமாறி குற்றம்சாட்டி பேசிய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆர்பித் இளம்பெண் அகான்ஷாவை கடுமையாக தாக்கினார்.


இதில் அவர் உயிரிழந்த நிலையில் ஆர்பித் அங்கிருந்து தப்பியோடினார். சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இளம்பொண் கொல்லப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர். உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையின்போது, இளைஞர் அகான்ஷாவை கொலை செய்த பின்னர், அதை தற்கொலையாக மாற்ற திட்டம்போட்டார். இதற்காக சீலிங் ஃபேனில் அவரது சடலத்தை ஆர்பித் தொங்கவிட முயற்சித்தார். இது தோல்வியில் முடிந்தது. இதனால் அங்கிருந்து தப்பியோடினார்.

ஆனால் அவரது செல்போனை அங்கேயே விட்டு விட்டு சென்றது போலீசாருக்கு முக்கிய தடயமாக கிடைத்தது. இளைஞர் ஆர்ப்த் தனது சொந்த ஊரான டெல்லிக்கு சென்றிருக்கலாம் என்பதால் தனிப்படையினர் அங்கு விரைந்து அவரை தேடி வருகின்றனர். இந்த கொலை பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.