கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் பெங்களூரு லாகேரே அருகே உள்ள விதான் செளதா லேஅவுட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பெண்கள் தனியாகவும் அறைகள் எடுத்து வசித்து வருகின்றனர். அதேபோல் மகளிர் விடுதியும் அதிகம் உள்ளது.

இந்நிலையில், விதான் சௌதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் அடிக்கடி காணாமல் போனது. முதலில் சில வீடுகள், விடுதிகளில் காணாமல்போன நிலையில், இது அதிகரித்தது.
மொட்டை மாடிகளில் காயப்போடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போனதால் அப்பகுதி பெண்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர், ஒரு வீட்டிற்குள் நுழைந்து உள்ளாடைகளை திருடிக் கொண்டு ரகசியமாக மொட்டை மாடிக்குச் செல்கிறார்.

அங்கு அவர் அநாகரீக செயலில் ஈடுபடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள சைக்கோ துவைத்துக் காயப்போடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள், ரவிக்கைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்.
பின்னர் தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அநாகரீமான செயலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த நபரைத் தேடி வருகிறோம் என கூறினார்கள்.















