மனைவியின் தங்கை மீது வந்த ஆசை… உறவுக்கு மறுத்ததால் நடந்த கொடூரம்!!

1393

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் உள்ள கட்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவியின் உடல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டது.

அந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், முதற்கட்ட விசாரணையிலேயே அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது.

ஏனென்றால் அந்த மாணவியின் உடலில் அந்தளவுக்குக் கொடூரமான காயங்கள் கண்டெடுக்கப்பட்டது. குறிப்பாக அந்த இளம்பெண்ணின் கண்கள் ஸ்க்ரூடிரைவரால் குத்தப்பட்டிருந்தது. அவரது தொண்டை பிளேடால் அறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.


இதற்கிடையே இந்த வழக்கில் மாணவியின் மைத்துனர் அனில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மாணவியின் அக்கா லலிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர் தான் இந்த அனில்.

மனைவியின் தங்கை என்று கூட பார்க்காமல் கொலை செய்யப்பட்ட அந்த நர்சிங் மாணவியுடன் அனில் நெருக்கமாக இருக்க விரும்பியுள்ளார். மேலும், அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக எல்லாம் கூட கூறியுள்ளார்.

இருப்பினும், அனிலை அந்த மாணவி நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனில் மாணவியின் நடவடிக்கையைக் கவனிக்க ஆரம்பித்துள்ளார். அந்த மாணவி அடிக்கடி ஒரு இளைஞருடன் சாட் செய்வதைப் பார்த்து அனில் கடுப்பாகியுள்ளான்.

இது குறித்து அந்த மாணவியின் தந்தை மற்றும் சகோதரனிடமும் கூறியுள்ளான். அவர்கள் இருவரும் அந்த மாணவியிடம் சாட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே கடந்த ஜூன் 10ஆம் தேதி இரவு, அந்த மாணவிக்கு அவரது அப்பாவுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாணவியின் அக்கா லலிதா எதார்த்தமாகத் தனது கணவன் அனிலிடம் கூறியுள்ளார்.

உடனடியாக அவர்கள் வீட்டிற்குச் சென்ற அனிலும் அந்த மாணவியுடன் சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் அதிகரிக்கவே அனில் அந்த பெண்ணை அவமானப்படுத்தும் வகையில் பேசி தாக்கவும் செய்துள்ளான்.

இதனால் மனமுடைந்த மாணவி வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளார். இதையடுத்து அனில் அந்த மாணவியைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது ஒரு இடத்தில் அந்த மாணவியைக் கண்டுபிடித்த அனில், நடுரோட்டிலேயே அவருடன் சண்டை போட்டுள்ளார்.

அப்போதும் வாக்குவாதம் அதிகரிக்கவே, மதுபோதையில் இருந்த அனில் கையில் கிடைத்த அனைத்து விஷயங்களையும் வைத்து அந்த மாணவியைத் தாக்கியுள்ளார்.

அந்த நீர்த்தேக்கத்தில் அந்த மாணவியை மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து எதுவுமே தெரியாதது போலச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்தில் அனிலை கைது செய்துள்ள போலீசார், குடும்ப உறுப்பினர்களிடம் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.