கள்ளக்காதலுக்கு இடையூறு…. கணவனைக் கொன்று புதைத்த மனைவி : இறுதியில் நேர்ந்த சோகம்!!

1113

தஞ்சாவூர்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பாரதி. இவரது மனைவி திவ்யா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாரதி, சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதியின் அக்கா கணவரான செல்வமணி என்பவர், பந்தநல்லுார் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில் தன்னுடைய மனைவியின் தம்பி பாரதி என்பவர் காணவில்லை என்றும், அவருடைய மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். வழக்கு பதிந்த பந்தநல்லுார் போலீசார் கடந்த சில நாட்களுக்காக, பாரதியை தேடி வந்தனர்.


விசாரணையின் போது, போலீசாருக்கு பாரதியின் மனைவி மீது சந்தேகம் ஏற்பட, அவருடைய மொபைல் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது, திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை தெரிந்துக் கொண்ட போலீசார், அவரை அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் திவ்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. பாரதி சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மனைவி திவ்யாவுக்கும், கீழ்மாந்துாரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகாத உறவு பாரதிக்கு தெரியவர மனைவி திவ்யாவை எச்சரித்துள்ளார். மேலும், இது குறித்து தனது அக்கா கணவர் செல்வமணியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். கள்ளக்காதல் விவகாரம் தனது கணவருக்கு தெரிந்து விட்டதால் அதிர்ச்சியடைந்த திவ்யா, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி திவ்யா கடந்த மே.16ம் தேதி, தனது கணவர் பாரதியை அன்பாக பேசி ஊருக்கு வரவழைத்துள்ளார். ஊருக்கு வந்த கணவர் வீட்டிற்குள் நுழைந்ததும், மறைந்திருந்த கள்ளக்காதலன் சதிஷ்குமாருடன் சேர்ந்து கட்டையால் தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.

பின்னர், பாரதியின் உடலை, மூட்டையாக கட்டி, இருவரும், லோடுஆட்டோவில் எடுத்து சென்று, திருப்பனந்தாள் அருகே பட்டம் பகுதியில் உள்ள பாலத்தின் அருகே புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.