முதியவர் கழுத்தறுத்து கொலை.. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண் கொடூரம்!!

910

திண்டுக்கல்..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர் முதியவர் மாணிக்கம். இவர், பொருளூர் கிராமத்தில் பாப்பாத்தி என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

நேற்று வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். வழியில் பொருளூர் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கீழ் உறங்கியுள்ளனர்.

இந்தநிலையில், இன்று காலை குடிநீர் தொட்டிக்கு கீழ் மாணிக்கம் மட்டும் நீண்ட நேரமாக படுத்துள்ளார். அவர் எழுந்திருக்கவில்லை என்பதால சந்தேகம் அடைந்த அப்பகுதி வழியே சென்றவர்கள், அருகில் சென்று பார்த்த போது முதியவர் மாணிக்கம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மாணிக்கத்துடன் சேர்ந்து வாழ்ந்துவந்த பாப்பாத்திதான் உறங்கும்போது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அவரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.