காதலிச்சு ஏமாற்றிய காவல் அதிகாரியின் மகன் : காதலியின் துணிச்சல் முடிவால் பதறிய காதலன்!!

972

சேலம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ரவி (60) என்பவரின் மகன் விக்னேஷ் (23) இவர் 2021 ஆம் ஆண்டு கோவையில் தங்கி எம்.பி.ஏ படித்து வந்தார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த தீபிகா (23) என்ற இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இன்ஸ்டாகிராமில் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு இருவரும் பேசத் தொடங்கினர். இதில் நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இருவரும் மேற்படிப்புக்காக திருச்சி சென்றனர். அங்கு ஒரே வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்தனர் .

அப்போது காதலர்களான இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் விக்னேஷ் திருச்சிக்கு செல்லவில்லை. வீடு திரும்பிய பிறகு காதலி தீபிகாவை அவர் தொடர்பும் கொள்ளவில்லை. காதலனை தொடர்புகொள்ள முடியாததால் இளம்பெண் தீபிகா சந்தேகமடைந்தார்.


இதனால் சேலம் சென்ற தீபிகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தார். அதில், ஒரே வீட்டில் ஒன்றாக வசித்துவந்த விக்னேஷ் என்பவரை திருமணம் செய்துவைக்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். அதன்படி இரு வீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார் .

அதன் பிறகு விக்னேஷ் ஒரு மாதம் சென்னை தரமணியில் மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் ஆத்தூர் சென்று வருவதாக கூறியவர் மீண்டும் மனைவியை பார்க்க செல்லவில்லை .இதனால் ஏமாற்றம் அடைந்த தீபிகா தனது உறவினுடன் ஆத்தூர் சக்தி நகரில் உள்ள தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

இது குறித்து இளைஞர் விக்னேஷ் கூறுகையில், நாங்கள் காதலித்தோம் என்றாலும், கருத்து வேறுபாடு காரணமாக நான் பிரிந்து விட்டேன். ஆத்தூர் மகளிர் போலீசில் இன்ஸ்பெக்டர் தமிழரசி கட்டாயப்படுத்தியதால் தீபிகாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.

இரு தினங்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்த தீபிகா மற்றும் அவரது உறவினர்கள், வீட்டுக்குள் வைத்து எனது சகோதரி சங்கீதாவை தாக்கினர். தீபிகாவுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லாததால் அவரது வீட்டிற்கு செல்லும்படி கூறியும் என்னை டார்ச்சர் செய்து மிரட்டல் விடுத்து வருகிறார், என்றார்.

எனினும் கணவரை சேர்த்துவைக்க வேண்டும் என்று இளம்பெண் தீபிகா, இன்றும் நான்காவது கணவர் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தீபிகா கூறுகையில், விக்னேஷ் என் மீது பொய் புகார் கூறுகிறார்.

அவரது பெற்றோர் கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் வரதட்சணை கேட்டு மிரட்டி வருகின்றனர். நான் விக்னேஷ் உடன் சேர்ந்து வாழ்வேன். அதற்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் போராட்டத்தில் ஈடுபடுவேன், என்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.