பெண்ணுடன் கல்லூரி மாணவர் அவ்வப்போது உல்லாசம்.. திடீரென மறுத்ததால் நடந்த கொடூரம்!!

1546

நாகை..

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியில் சுந்தரமூர்த்தி- துர்கா தேவி (42) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு தினேஷ் (20) என்ற மகன் உள்ளார். துர்காதேவி கடந்த 18ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

கணவன், மகன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர். ஆனால், மறுநாள் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள புஷ்பவனம் கடற்கரையில் துர்கா தேவி சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டபோது, தலையில் காயத்துடன் துர்காதேவியின் உடல் கிடந்தது தெரியவந்தது.


இதனால் அவர் கொலைச் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து விசாரணையில், துர்கா தேவியுடன் புஷ்பவனம் அழகுக்கண்டர்காட்டை சேர்ந்த அருண் (20) என்ற இளைஞர் பழகி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அருணை பிடித்து போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின. அருண் சேலம் தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாமாண்டு மயக்கவியல் படித்து வருவதும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து வேதாரண்யம் பகுதியில் வாட்ஸ்அப் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது.

அவ்வாறு மளிகை பொருட்கள் விற்கும் போது அருண்- துர்காதேவி இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அவ்வப்போது அருண், துர்காதேவிக்கு பணம் கொடுத்து வந்திருக்கிறார்.

சமீபத்தில் அருண் பிறந்த நாளன்று, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபின் துர்கா தேவிக்கு ஒன்றரை பவுன் நகை அருண் பரிசாக அளித்திருக்கிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பவனம் கடற்கரையில் துர்காதேவியுடன், மாணவர் அருண் தனிமையில் இருந்திருக்கிறார்.

அப்போது துர்காதேவி, அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அருண் பணம் இல்லையென கூறியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இனி தன்னை பார்க்க வர வேண்டாம் என துர்காதேவி கூறியதால், ஆத்திரமடைந்த அருண், துர்காதேவி மீது 3 முறை காரை ஏற்றி கொலைச் செய்துள்ளார்.

இதில் துர்காதேவி சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்ததாக விசாரணை நடத்திய போலீசார் கூறினர். பின்னர் அருணை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.