நடுரோட்டில் நாய் காதல்… பைக் ஓட்டிக் கொண்டே காதல் ஜோடி ரொமான்ஸ்… வைரலாகும் வீடியோ!!

797

உத்தரப் பிரதேசம் ..

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் அதிவேகமாக பைக்கை ஓட்டியபடியே முன்னால் காதலியை அமர வைத்துக் கொண்டு ரொமான்ஸ் செய்தபடியே பயணிக்கிறது காதல் ஜோடி. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இரு சக்கர் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது இளம்பெண் அமர்ந்தபடியே பைக் ஓட்டிச் செல்லும் காதலனைக் கட்டிப் பிடித்தப்படி முத்தமிட்டுக் கொண்டு ரொமான்ஸ் செய்கிறார். பைக்கின் வேகமும் குறையாமல், அதிவேகத்தில் பைக் செல்கிறது. ஹெல்மெட் அணியாத நிலையில் இருவரின் உயிருக்கும் எந்தவிதமான உத்தரவாதம் இல்லை. அது சரி.. ஹெல்மெட் அணிந்தால் எங்கே… எப்படி முத்தமிட்டுக் கொள்வது?

இந்த வீடியோவை அதே சாலையில் பயணித்த ஆகாஷ் குமார் என்பவர் வெளியிட்டு, சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஜோடி சாலை பாதுகாப்பு விதிகளை மீறியிருப்பதாகவும் கூறி, உத்தரப்பிரதேச போலீஸை டேக் செய்து வெளியிட்டுள்ளார்.


வீடியோ வைரலான நிலையில் இது குறித்து காஜியாபாத் துணை போலீஸ் கமிஷனர், இந்திராபுரம் இன்ஸ்பெக்டருக்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆபத்தான முறையில் சாலை விதிகளை மீறி பைக்கை ஓட்டிச் சென்ற ஜோடிக்கு சாலை விதிகளை மீறியதாக அபராதம் விதித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுள்ளனர்.

அதே வீடியோவுக்கு கீழே காதலர் ஒருவர், எவ்வளவு அபராதம்னு சொன்னா, நாங்களும் கட்டுவோமில்ல என்று கமெண்ட் செய்துள்ளார்.