செல்பி மோகத்தால் 2 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!

689

திருப்பூர்..

திருப்பூர் அருகே உள்ள அணைப்பாளையம் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் பாண்டியன், விஜய் ஆகிய இருவரும் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி உள்ளனர்.

நேற்று ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரயில் முன்பாக நின்று செல்பி எடுக்கப் போவதாக தன்னுடைய சக நண்பர்களிடம் பெருமையாக கூறிவிட்டு வந்தனர். இருவரும் அறையிலிருந்து கிளம்பி ரயில் செல்லும் போது செல்பி எடுப்பதற்காக ரயில்வே தண்டவாளம் அருகில் நின்று கொண்டு இருந்தனர்.

சரியாக ரயில் வரும்போது செல்பி எடுக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


ரயிலுக்காக காத்திருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் இருவரது உடல்களையும் திருப்பூர் ரயில் நிலைய இருப்பு காவல் நிலைய போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் மீது ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.