காதலித்து ஏமாற்றிய காதலன்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

535

அசாம்..

அசாம் மாநில தலைநகரான கவுகாத்தி அருகே அமைந்துள்ள காந்தி மண்டபம் என்ற பகுதியில், இளம்பெண் ஒருவ ஆர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனால், அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், அந்த பெண் தற்கொலை செய்யும்முன் எழுதிய கடிதமும் போலிசாரிடம் கொடுக்கப்பட்டது. அதில், அந்த “மன்னிச்சுடுங்க அம்மா, மன்னிச்சுடுங்க அப்பா, மன்னிச்சுடுங்க அக்கா என்று ஆங்கிலத்தில் எழுதி, அதில் தனது அந்தரங்க புகைப்படம் இணையத்தில் வெளியானதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் போலிஸார், விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண் அமித்மேதி என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது, அவரை காதலித்தபோது இருவரும் தனிமையில் எடுத்த வீடியோ, மற்றும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதாக கூறியுள்ளார்.


இதனைக் கண்ட அந்த இளம்பெண் மனஉளைச்சரில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து அமித்மேதியை போலிஸார் கைது செய்தனர்.

மேலும், அவரின் செல்போனில் அந்த இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தரங்க வீடியோ வெளியானதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.