கள்ளக் காதலனால் கர்ப்பம்.. கழிப்பறையில் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

6226

சென்னை..

சென்னை வேளச்சேரி சசிநகர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் சங்கீதா. திருமணமான சங்கீதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவருக்கு தெரியாமல் மளிகைக் கடைக்காரர் உடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் சங்கீதா.

இந்நிலையில், திடீரென சங்கீதா கர்ப்பமாகியுள்ளார். கருவை கலைக்க அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் செய்வதறியாது தவித்துள்ளார் சங்கீதா. ஒரு கட்டத்தில் மாதம் நெருங்க நெருங்க சங்கீதாவின் வயிறு பெரிதாகியுள்ளது.

சந்தேகம் அடைந்த சங்கீதாவின் கணவரும், அக்கம் பக்கத்தினரும் ‘ஏன் வயிறு பெரிதாக இருக்கிறது?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு, ‘சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகிவிட்டது’ என்று கூறி, சமாளித்துள்ளார் சங்கீதா.


நேற்று முன்தினம் சங்கீதாவின் கணவர் வெளியே சென்ற நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் கழிப்பறைக்கு சென்ற சங்கீதாவிற்கு, அங்கேயே பிரசவம் ஆனது. அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவர் வருவதற்குள் அதை மறைக்க முயற்சித்த சங்கீதா, அந்த குழந்தையை அருகில் உள்ள ஏரியில் கொண்டு சென்று வீசியுள்ளார்.

அதன் பின் எதுவுமே நடக்காதது போல, வீட்டிற்கு வந்துள்ளார் சங்கீதா. இரண்டாவது நாளில் குழந்தை சடலம் மேலே மிதந்து வர, சடலத்தை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அங்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

யாருடைய குழந்தை என்று தெரியாத நிலையில், அக்கம் பக்கத்தில் விசாரிக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில், முறையான பிரசவம் நடக்காததால் சங்கீதாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் போலீசாருக்கு தெரியவர, உடனே சங்கீதாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சிக்கிவிட்டோம் என்பதை உணர்ந்த சங்கீதா, நடந்தவற்றை ஒன்று விடாமல் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து சங்கீதா மீது கொலை வழக்கு பதிவு செய்த வேளச்சேரி போலீசார், அவரை கைது செய்தனர்.

 

மேலும் குழந்தை யாருடையது என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில் டி.என்.ஏ., பரிசோதனைக்கும் பரிந்துரைத்துள்ளனர். கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதலில் இருந்தது, அதனால் முறை தவறி கர்ப்பமானது,

அதை 10 மாதங்கள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டது, கழிப்பறையில் பிரசவம் பார்த்தது, பச்சை குழந்தையை துடிக்க துடிக்க ஏரியில் வீசி கொன்றது என , அடுத்தடுத்து கொடூர குற்றங்களில் ஈடுபட்ட சங்கீதாவின் செயல், அவர் வசிக்கும் பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.