கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொடுமை செய்த கணவர் : விபரீத முடிவு எடுத்த மனைவி!!

1652

பெங்களூரு…..

பெங்களூரு அருகே உள்ள ஹெக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் 2019ஆம் ஆண்டில் சேத்தன் கவுடா என்ற நபரை திருமணம் செய்துள்ளார். 35 வயது பெண்ணான பவித்தார தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பின்னர் விவாகரத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சேத்தன் கவுடாவும் பவித்ராவும் ஒரு இடத்தில் வேலை செய்து வந்த நிலையில், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிடித்துப்போய் 2019இல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூஜா கவுடா என்ற பெண் இவர்கள் வாழ்க்கைக்குள் வந்துள்ளார்.

பவித்ராவின் கணவருக்கு பூஜா கவுடா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியுள்ளது. சேத்தன் கவுடாவும் அந்த பெண்ணும் பல இடங்களுக்கு தனியாக சென்று வந்துள்ளனர்.


இந்த கள்ளக்காதல் விவகாரம் மனைவி பவித்ராவுக்கு தெரிய வரவே இது குறித்து அவர் தட்டிகேட்டுள்ளார். அப்போது கணவரும் அந்த பெண்ணும் இவரை தாக்கி துன்புறுத்தியதாக பவித்ரா கூறியுள்ளார்.

இதனால் மனம் உடைந்து போன பவித்ரா, கடந்த ஜூலை 2ஆம் தேதி தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்ஆப்பில் ஸ்டேடஸ் வைத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தனது மகளின் ஸ்டேட்டஸை பார்த்த பவித்ராவின் தாய் பத்மம்மா வீட்டிற்கு பதறி அடிக்கொண்டு பார்க்கவே மகள் அங்கு சடலமாக இருந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மரணத்திற்கு முன்னர் பவித்ரா எழுதிய தற்கொலை கடிதத்தை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதில், கணவர் மீதான புகார்கள் அனைத்தையும் பவித்ரா தெளிவாக எழுதியுள்ளார்.