சுவர் ஏறி குதித்து தந்தை அட்டூழியம்… கதறியழுத தமிழ் நடிகை.. வெளியான கண்ணீர் வீடியோ!!

693

நடிகை அர்த்தனா….

தமிழ் திரையுலகில் 2017ல் தொண்டன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை அர்த்தனா பினு. இவர் தொடக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

பின்னர் மாடலிங்கில் தம்மை ஈடுபடுத்தி கொண்டார். அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில். தெலுங்கில் ‘சீதா மகாலட்சுமி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவாக அறிமுகமான ‘முதுகவ்’ படத்தில் மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தார்.

தமிழில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக செம்ம, நடிகர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 என அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. பிரபல மலையாள நடிகர் விஜயகுமாரின் மகள் தான் இந்த அர்த்தனா பினு. கடந்த 10 ஆண்டுகளாக தனது தாயார், தங்கையுடன் தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்த்தனா பினு தனது தந்தை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகையின் கசப்பான காதல் அனுபவங்கள் இந்த வீடியோவில் இருப்பவர் மலையாள திரைப்பட நடிகரான எனது தந்தை விஜயகுமார்.நான், என் அம்மா, தங்கை  என 10 ஆண்டுகளாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் சொத்துக்காக சுவர் ஏறி குதித்து எங்கள் வீட்டில் அத்துமீறி நுழைய பார்க்கிறார். எனது பெற்றோர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவர்கள், நானும் எனது அம்மாவும் எனது சகோதரியும் 85 வயதுடைய  பாட்டியுடன் நாங்கள் வசித்து வருகிறோம்.   அவர் பல ஆண்டுகளாக அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து வருகிறார்.

இன்று, அவர் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தார், கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர் திறக்கப்பட்டிருந்த ஜன்னல் வழியாக எங்களை மிரட்டத் தொடங்கினார். என் தங்கையையும் பாட்டியையும் கொன்றுவிடுவதாக மிரட்டுவதைக் கேள்விப்பட்டபோது அவரிடம் பேசினேன். படங்களில் நான் நடிப்பதை நிறுத்தி விட வேண்டும் எனவும்,  நான் அவர் பேச்சை கேட்காவிட்டால் எந்த எல்லைக்கும் செல்வேன் எனவும்  மிரட்டினார்.

ஜன்னலில் முட்டிக்கொண்டு கத்திக் கொண்டே இருந்தார். நான் நடித்து முடித்துள்ள எனது மலையாளப் படத்தின் குழுவையும் அவர் மிக மோசமாகப் பேசியுள்ளார். எனது வேலைபார்க்கும் இடத்தில் அத்துமீறி நுழைந்து, ஊடுருவி, பிரச்சனைகளை உருவாக்கினார்.

என் அம்மாவின் பணியிடத்திலும், சகோதரியின் கல்வி நிறுவனத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தினார். இது குறித்து நானும் என் அம்மாவும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.

என் விருப்பப்படி மட்டுமே படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பு என்பது எப்போதுமே எனது விருப்பம், எனது உடல்நிலை என்னை அனுமதிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். நான் மலையாளப் படத்தில் நடிக்கும்போதெல்லாம் என்னை நடிக்கவிடாமல் தடுக்க வழக்கு தொடர்ந்தார்.

நான் ஷைலாக் படத்தில் நடித்தபோது கூட, என்மீது வழக்கு தொடர்ந்தார். மேலும் படம் கிடப்பில் போடப்படுவதைத் தடுக்க, நான் என் சொந்த விருப்பப்படி படத்தில் நடித்தேன் என அதிகாரப்பூர்வ சட்ட ஆவணத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது. என் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய பணம் மற்றும் தங்கத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Arthana Binu (@arthana_binu)